செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கும் சட்ட முன்வடிவு - அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு!

01:14 PM Jan 10, 2025 IST | Murugesan M

ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்கும் சட்டமுன்வடிவுக்கு அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Advertisement

தமிழகத்தில் 8 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 28 மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு 2019ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டன. அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜனவரி 6 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், எல்லை மறுவரையறை செய்யும் பணிகள் நிறைவடையாததால் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளை சட்டமாக கொண்டு வரும் வகையில், சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டமுன்வடிவை முன்மொழிந்தார்.

Advertisement

இந்த சட்டமுன்வடிவுக்கு அதிமுக, பாமக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்தன. திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சட்டமுன்வடிவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தின.

Advertisement
Tags :
aiadmkFEATUREDlocal government bodiesMAINofficers for local bodiespmktn govermenttn Legislative Assembly
Advertisement
Next Article