For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

உள்ளே நுழைந்த நிபா வைரஸ் - புதுச்சேரியில் பரபரப்பு!

10:27 AM Sep 23, 2023 IST | Sivasubramanian P
உள்ளே நுழைந்த நிபா வைரஸ்   புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரியில் ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அங்கு நிபா வைரஸ் பாதிப்புக்கு 2 பேர் பலியாகியுள்ளனர். இதனால், அண்டை மாநிலங்கள், நிபா வைரஸில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், நிபா வைரஸ் அண்டை மாநிலங்களிலும் பரவ வாய்ப்பு உள்ளதால், பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு, நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Tags :
Advertisement