செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உழவர் சந்தையில் பணி நேரத்தில் உறங்கிய உதவி நிர்வாக அலுவலர் : தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் விசாரணை!

04:19 PM Apr 09, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் பணி நேரத்தில் உதவி நிர்வாக அலுவலர் தூங்கியது குறித்து தமிழ் ஜனத்தில் செய்தி வெளியானதால், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

தாதகாப்பட்டி உழவர் சந்தையில் வெங்கட்ராமன் என்பவர் உதவி நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் அலுவலகத்திலேயே உறங்குவது மட்டுமின்றி விவசாய பொருட்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய லஞ்சம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வெங்கட்ராமன் பணி நேரத்தில் அலுவலகத்திலேயே உறங்கியது குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியால் வேளாண் வணிகவரித்துறை துணை இயக்குநர் பிரேமா தலைமையில், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Advertisement

மேலும் வெங்கட்ராமன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
Tags :
Assistant Administrative Officer who fell asleep during work hours at the Farmers' Market: Officials investigate after Tamil Janam news echoes!MAINTn news
Advertisement