உ.பி. மருத்துவக்கல்லூரி தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்!
11:00 AM Nov 16, 2024 IST
|
Murugesan M
உத்தரபிரதேசம் மாநிலம் ஜான்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
Advertisement
ஜான்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல பிரிவல் 54 பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தனர்.
தீ விபத்தில் காயமடைந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன.ஆக்சிஜன் செறிவூட்டி வெடித்து இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.,
Advertisement
இதனிடைய உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
Next Article