ஊசி மூலம் தர்பூசணி பழத்தை சிவப்பாக மாற்ற முடியாது - தோட்டக்கலை துறை அதிகாரிகள் திட்டவட்டம்!
10:40 AM Mar 31, 2025 IST
|
Ramamoorthy S
ஊசி மூலம் தர்பூசணி பழத்தை சிவப்பாக மாற்ற முடியாது என்றும், இது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
திருவள்ளூர் மாவட்டத்தில் தர்பூசணி சாகுபடி செய்யப்படும் வயல்களில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, தர்பூசணியில் நிறத்துக்காக ஊசி செலுத்தப்படுகிறது என சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் தர்பூசணி பழங்களை எந்தவித பயமும் இன்றி உண்ணலாம் எனவும் கூறினர்.
Advertisement
Advertisement