செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஊடுருவல்காரர்களை அனுமதித்து மக்களின் நிலங்களை பறித்த ஹேமந்த் சோரன் அரசு - உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!

09:51 AM Nov 17, 2024 IST | Murugesan M

ஹேமந்த் சோரன் அரசு ஊடுருவல்காரர்களை அனுமதித்து மக்களின் நிலங்களை பறித்ததாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ஹேமந்த் சோரன் ஊடுருவல்காரர்களை அனுமதித்து, ஆதிவாசிகளின் மக்கள்தொகை மற்றும் நிலங்களை குறைத்ததாக குற்றம் சாட்டினார். இந்த ஊடுருவல்காரர்கள் ஜார்க்கண்ட் இளைஞர்களின் வேலைகளை பறிப்பதாகவும் அவர் கூறினார்.

பாஜக அரசு அமைந்தவுடன் ஊடுருவல்காரர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், ஊடுருவல்காரர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி வங்கதேசத்துக்கு அனுப்ப கூறிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்துக்கு சென்றதாகவும் அமித்ஷா கூறினார்.

Advertisement

Advertisement
Tags :
DumkaFEATUREDHemant Soran governmenthome minister amit shahinfiltratorsJharkhandMAIN
Advertisement
Next Article