ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொளி காட்சி மூலம் ஆஜராகி இருந்தனர்.
அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டார். இ-பாஸ் நடைமுறை சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்துவதற்கு அல்ல என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும், சுற்றுலா வருபவர்களுக்கு பசுமை வரி விதிப்பது தொடர்பாக அலோசிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிசம்பர் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.