ஊர் கூடி நடத்திய சமத்துவ பொங்கல் விழா!
04:48 PM Jan 12, 2025 IST
|
Murugesan M
அரியலூர் மாவட்டத்தில் வேற்றுமை மறந்து கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
Advertisement
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூர் ஊராட்சி சார்பில் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதில் 70 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் குழுக்களை அடையாளப்படுத்தும் விதமாக வண்ண வண்ண சேலைகள் உடுத்தி விழாவில் பங்கேற்றனர்.
Advertisement
தொடர்ந்து புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என்ற கோஷத்துடன் சமத்துவ பொங்கலை அவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Advertisement
Next Article