ஊழலுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டு அரசும் காவல்துறையும் அஞ்சுவது ஏன்? : பாமக தலைவர் அன்புமணி கேள்வி!
05:07 PM Mar 17, 2025 IST
|
Murugesan M
டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற பா.ஜ.க. தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ஊழலுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டு அரசும் காவல்துறையும் அஞ்சுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுவதற்கு கூட அனுமதி இல்லையா? என வினவியுள்ள பாமக தலைவர் ராமதாஸ்,
Advertisement
திமுகவினர் ஊழல் செய்யவில்லை என்றால், அடக்குமுறைகளை கைவிட்டு, டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
Advertisement