ஊழல் நிறைந்த திமுக அரசை அகற்ற என்டிஏ கூட்டணி ஒருங்கிணைந்து செயல்படும் - அண்ணாமலை
06:29 AM Apr 12, 2025 IST
|
Ramamoorthy S
ஊழல் நிறைந்த திமுக அரசை வேரோடு அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைந்து செயல்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக ஊழலை நிறுவனமயமாக்கி உள்ளதாகவும், ஒரு சிலருக்கு பலனளிக்கும் வகையில் ஒவ்வொரு நிர்வாக அமைப்பிலும்
ஊழல் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
2026 சட்டசபை தேர்தலில் ஊழல் நிறைந்த திமுக அரசை வேரோடு அகற்றி தமிழக மக்களுக்கு உண்மையான சேவையை மீட்டெடுக்க அதிமுக - பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படும் எனவும் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement