எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது போல இசையிலும் தமிழ் இருக்க வேண்டும்! : ஸ்டாலின் விருப்பம்
10:03 AM Nov 25, 2024 IST | Murugesan M
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது போல இசையிலும் தமிழ் இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் முத்தமிழ்ப் பேரவையின் பொன் விழா ஆண்டு இசை விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
Advertisement
இந்நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் அவர்களின் வாழ்க்கை சரிதம் நூலை வெளியிட்டார். இதனை தொடர்ந்து, நடிகர் சத்யராஜ், T.K.S.மீனாட்சி சுந்தரம், ஆண்டாள் பிரியதர்ஷினி உள்ளிட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது போல இசையிலும் தமிழ் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
Advertisement
Advertisement