எச்1பி விசா: இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம்!
அமெரிக்காவில் எச்1பி விசாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால், அங்கு பணியாற்றும் இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், கடுமையான குடியேற்றக் கொள்கையை அமல்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.
மேலும், வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவதற்கான எச்1பி விசாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கவும் ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது.
இதனால் அங்குள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வரும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
இதுமட்டுமன்றி சான்பிரான்சிஸ்கோவில் உள்ள நிறுவனத்தில் வேலை கிடைத்த ஹைதராபாத்தை சேர்ந்த சிலருக்கு கடைசி நேரத்தில் பணி வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.
இதனால், ஏற்கெனவே பார்த்துக்கொண்டிருந்த வேலையையும் விட்டு விட்டு, தங்களின் எதிர்காலம் குறித்து அவர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டில் அமெரிக்கா விநியோகித்த 3 லட்சத்து 80 ஆயிரம் எச்1 பி விசாக்களின் மூலம் பயனடைந்தவர்களில் 72 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.