எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன்!
அவதூறு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் இருந்தபோது, அப்போது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்த முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தார்.
இந்நிலையில் கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, கே.சி. பழனிசாமி குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்த நிலையில் அவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி வரும் 15 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறி நீதிபதிகள் சம்மன் வழங்கினர்.