செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

எண்ணெய் குளியல்? ஏற்ற நேரம் எது? சிறப்பு பதிவு!!

09:00 PM Oct 30, 2024 IST | Murugesan M

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், எந்த நேரத்தில் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும் என்பது குறித்து சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஈஸ்வர் குருக்கள் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக ஜனம் தமிழ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது :

தீபாவளி அன்று காலை பிரம்ம முகூர்த்தம் என்பதால் அதிகாலை 3.00 முதல் 4.30 மணிக்குள் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

பிரம்ம முகூர்த்தத்தின் போது நீர்நிலைகளில் கங்கை இருப்பதாக ஐதீகம் என்றும்,  ''தீபாவளி அன்று முறையாக நீராடுவதே ''கங்கா ஸ்நானம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தீபாவளி அன்று ''கங்கா ஸ்நானம்'' செய்தால் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் என்றும், 'காலை 3 - 4.30 மணிக்குள் சிறியவர்களுக்கு எண்ணெய் வைத்துவிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தசராவில் இருந்தே தீபாவளி தொடங்கி விடுகிறது. 'பிரம்ம முகூர்த்தத்தில் நல்லெண்ணெய் வைத்து வெந்நீரில் குளிக்க வேண்டும். 'தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே பூஜையை தொடங்க வேண்டும்.

தென் இந்தியாவில் தீபாவளிக்கு கேதார கெளரி என்ற பெயரும் உண்டு'. 'வட இந்தியாவில் லட்சுமி பூஜை என்ற பெயரில் வழிபாடு நடத்தப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDMAINChennaiDiwaliTiruvottiyurIshwar GurusBrahma Mugurtham`Ganga Sananamdiwalin bath
Advertisement
Next Article