எண்ணெய் வயல்கள் சட்டத்திருத்தத்தால் மாநில உரிமைகள் பறிபோகாது என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
மக்களவையில் எண்ணெய் வயல்கள் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி உரையாற்றினார்.
அப்போது இந்தியாவில் முதலீடு செய்ய ஆா்வமுள்ள உலகளாவிய எண்ணெய் நிறுவனங்களின் குறைகளைத் தீா்ப்பதே இந்த மசோதாவின் நோக்கம் என கூறினார். மசோதாவால் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படாது என்றும், தற்போதுள்ள சமமான செயல்பாட்டையும் மாற்றாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.