எதிர்கட்சிகளின் அமளி - நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
எதிர்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
Advertisement
மக்களவை காலையில் கூடியதும் அதானி விவகாரத்தைக் கையிலெடுத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், முதலில் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், அவை மீண்டும் கூடியதும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக பாஜக உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக அவையை நாள் முழுவதும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
இதேபோல மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சிங்கி மனு இருக்கையிலிருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் கைபற்றப்பட்ட பிரச்னை பூதாகரமாக வெடித்தது.
அப்போது முறையான விசாரணையின்றி அபிஷேக் சிங்கியின் பெயரை அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.