எதிர்கட்சிகள் அமளி - நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
Advertisement
குளிர்கால கூட்டத்தொடரின் 20-ஆம் நாள் அமர்வு காலை 11 மணியளவில் கூடியது. மக்களவை கூடியதும் அம்பேத்கர் விவகாரத்தை கையிலெடுத்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இதற்கு அவைத் தலைவர் ஓம் பிர்லா மறுப்பு தெரிவித்ததை அடுத்து, இண்டி கூட்டணி எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதியில் திரண்டு முழக்கமிட்டதால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது
மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டுவந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை அவை தலைவர் ஜகதீப் தன்கர் ஏற்க மறுத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டதால், முதலில் பிற்பகல் 2 மணிவரையும் பின்னர் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.