எதிர்க்கட்சிகள் அமளி - நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
Advertisement
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி, 12-வது நாள் அமர்வு கூடியது. மக்களவை கூடியதும் அதானி விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதியில் திரண்டு அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த பாஜக உறுப்பினர்கள், காங்கிரஸ் மற்றும் அமெரிக்க தொழிலதிபர் சோரஸ் இடையே தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல மாநிலங்களவையிலும் அமளி நீடித்தது. அமெரிக்க தொழிலதிபர் சோரஸுக்கும் காங்கிரஸுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக பாஜக முன்வைத்த குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்.பி.க்கள் நிராகரித்து அமளியில் ஈடுபட்டனர்.
மேலும் அதானி விவகாரம் தொடர்பாக விவாதத்துக்கு எதிர்க்கட்சியினர் அழைப்பு விடுத்ததால், நண்பகல் 12 மணிவரையில் ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.