எதிர்க்கட்சிகள் அமளி - இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
Advertisement
குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவை பகல் 11 மணியளவில் கூடியது. கூட்டம் தொடங்கியதும் அம்பேத்கர் விவகாரத்தைக் எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மைய பகுதியில் திரண்டு கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். அவையை நடத்துவதில் இடையூறு ஏற்பட்டதால், மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அதன் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.இதேபோல் மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக அம்பேத்கருக்கு உரிய மரியாதை கொடுக்காமல், காங்கிரஸ் அவமதித்தாக குற்றம்சாட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அம்பேத்கர் விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்ட இண்டி கூட்டணி எம்.பி.க்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.