செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

எதிர்க்கட்சிகள் அமளி! : மக்களவை நண்பகல் வரை ஒத்திவைப்பு

12:08 PM Dec 09, 2024 IST | Murugesan M

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி, 11-வது நாள் அமர்வு கூடியது. மக்களவை கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், அமெரிக்க தொழிலதிபர் சோரஸுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீண்டும் குற்றம்சாட்டினார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதியில் திரண்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அதானி விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டுமென முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காததால், அக்கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

Advertisement
Tags :
FEATUREDMAINOpposition parties! : Adjournment of Lok Sabha till noon
Advertisement
Next Article