எதிர்க்கட்சியினர் தொடர் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், மக்களவையில் இன்றைய அமர்வு தொடங்கியதும், காலமான முன்னாள் மற்றும் இன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
அதேபோல, மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இரு அவைகளும் மீண்டும் கூடியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியை தொடர்ந்ததால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நாளை அரசியல் சாசன தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இரு அவைகளும் நாளை மறுநாள் காலை 11 மணிக்கு கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.