For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

என்.ஐ.ஏ உத்தரவில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

01:41 PM Dec 09, 2024 IST | Murugesan M
என் ஐ ஏ உத்தரவில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மாவோயிஸ்ட் அமைப்பின் நிதியில் இருந்து செலுத்தப்பட்ட மருத்துவ மாணவியின் கல்விக் கட்டணத்தை முடக்கிய என்.ஐ.ஏ உத்தரவில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் செயல்படும் மாவோயிஸ்ட் அமைப்பு செலுத்திய கல்விக் கட்டண தொகையை முடக்கி என்.ஐ.ஏ உத்தரவு பிறப்பித்திருந்தது.

Advertisement

இதனை எதிர்த்து மாணவி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாணவியின் கல்விக்கட்டணம் முடக்கப்பட்டதால் கல்லூரி நிர்வாகம் சான்றிதழ் தர மறுப்பதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகக் கூறி, என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், என்.ஐ.ஏ சம்மனுக்கு ஆஜராகி உரிய விளக்கமளித்து கல்விக் கட்டணம் முடக்கத்தை நீக்க கோரலாம் எனத் தெரிவித்தனர்.

மேலும், நன்கு படிக்கும் மாணவி எதிர்காலத்தில் பயங்கரவாத அமைப்பில் சேரமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Advertisement
Tags :
Advertisement