"என் தம்பி ஞானசேகரன்" - சபாநாயகர் அப்பாவு பேச்சால் சர்ச்சை!
09:35 AM Jan 21, 2025 IST
|
Sivasubramanian P
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தனது தம்பி என சபாநாயகர் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
சென்னையில் கடந்த வாரம் "இந்தியா வென்றது" என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், என் தம்பி ஞானசேகரன் வழக்கை விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளதாக கூறினார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஞானசேகரனை தனது தம்பி என குறிப்பிட்டு சபாநாயகர் அப்பாவு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என்ற சர்ச்சை சுழன்றடிக்கும் நிலையில், ஞானசேகரனை பொதுமேடையில் தனது தம்பி என சபாநாயகர் குறிப்பிட்டது பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Next Article