அண்ணா பல்கலை மாணவி வழக்கில் எப்ஐஆர் சரியாக பதிவு செய்யப்படவில்லை என்ற உயர் நீதிமன்றத்தின் பார்வை மகிழ்ச்சி அளிக்கிறது - அண்ணாமலை
அண்ணாப்பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கை சரியாக பதிவு செய்யப்படவில்லை என சென்னை உயர் நீதின்றம் தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது :
சென்னை உயர் நீதிமன்ற மாண்புமிகு நீதிபதி எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட விதம் குறித்து சுட்டிக்காட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தாக கூறியுள்ளார்.
எஃப்ஐஆர் சரியாக எழுதப்படவில்லை என்று நீதிபதி லட்சுமிநாராயணன் கூறுவதாகவும், பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவது போல் தெரிவதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
, எஃப்.ஐ.ஆர்.யை சரியாக பதிவு செய்வதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காவல் துறையினர் உதவி செய்திருக்க வேண்டாமா என்று நீதிபதி சுப்ரமணியம் கேள்வி எழுப்பியுள்ளதை அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.