எப்போது வருகிறது DMK files - 3 : சஸ்பென்ஸ் உடைத்த அண்ணாமலை!
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கின்ற வேளையில், திமுக files- 3 வெளியிடப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற தேர்தல் நெருங்கின்ற வேளையில், திமுக files- 3 வெளியிடப்படும் என்றும், அதில், திமுக மட்டுமல்லாது, அதன் கூட்டணி கட்சிகள் எடுத்த டெண்டர்கள், அதன் மூலம் அவர்கள் அடைந்த பலன்கள் அம்பலப்படுத்தப்படும் என தெரிவித்தார்
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை, கலைஞர் கைவினை திட்டம் என பெயரிட்டு
தமிழக அரசு அமுல்படுத்தியுள்ளதாகவும், இறுதியில் அவர்கள் மத்திய அரசிடம் தான் நிதி கேட்டு வருவார்கள் அப்படி கிடைக்க விட்டால், வடக்கு வாழ்கிறது தெற்குத் தெரிகிறது என்று வசனம் பேசுவார்கள் என்றும் அவர் கூறினார்.
ஆதி திராவிட நலத்துறை சார்பில் நடத்தப்படும் தொழிற்பயிற்சியில் முடி திருத்துதல், இஸ்திரி போடுதல் உள்ளிட்ட தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன. இது குலக்கல்வி இல்லையா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
விருதுநகரில் எஸ்எஸ்ஐ மாரிமுத்து தாக்கப்பட்டுள்ளார்.அதேபோன்று தமிழகம் முழுவதும் போலீசார்மீதான தாக்குதல் தொடர்கிறது.இது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளததை எடுத்துக்காட்டுவதாகவும் அண்ணாமலை கூறினார்.
விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்பதால் இந்தியாவில் தொடர்ந்து தடை செய்யப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் விடுதலைப் போராட்டமாக ஆரம்பித்த விடுதலைப் புலிகள் போராட்டம் பல்வேறு பழிவாங்கும் படுகொலை நிகழ்த்தியதால் அது பயங்கரவாத இயக்கமாக மாறியது. எனவே, இலங்கையிலும் இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றும் அண்ணாமலை கூறினார்.