செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

எம்புரான் திரைப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் - வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்!

08:30 PM Mar 30, 2025 IST | Ramamoorthy S

நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் திரைப்படத்தில் குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக புகார் எழுந்த நிலையில், அதற்காக மோகன்லால் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நடிகராக தனது திரைப்படங்கள் எந்தவோர் அரசியல் கட்சி, சித்தாந்தம் மற்றும் மத உணர்வை காயப்படுத்தக் கூடாது என்பதை உறுதிப்படுத்துவது தனது கடமை என கூறியுள்ளார்.

எம்புரான் படத்தின் சில காட்சிகள் ரசிகர்களின் உணர்வைக் காயப்படுத்தியிருந்தால், அதற்காக தாமும் எம்புரான் படக்குழுவினரும் வருத்தம் தெரிவிப்பதாக நடிகர் மோகன்லால் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும் இந்தத் தவறுக்கு ஒட்டுமொத்த படக்குழுவினரும் பொறுப்பேற்பதாக கூறிய அவர், சர்ச்சைக்குரிய காட்சிகளைப் படத்திலிருந்து நீக்க முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் மோகன்லாலின் இந்த அறிக்கையை எம்புரான் திரைப்பட இயக்குநர் பிரித்விராஜும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார்.

Advertisement
Advertisement
Next Article