செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வழியில் இபிஎஸ் கணக்கும் சரியாகத்தான் இருக்கும் : எஸ்.பி.வேலுமணி

04:37 PM Mar 26, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத்தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அதிமுக கூட்டணி குறித்து சுவாரஸ்யமாக உரையாடல் நடைபெற்றது.

அவையில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, 2026ல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து புதிய கணக்கை எடப்பாடி பழனிசாமி தொடங்குவார் எனத் தெரிவித்தார்.

Advertisement

உடனே குறுக்கிட்ட நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கணக்கு கேட்டு கட்சி ஆரம்பித்தவர்கள் தற்போது தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருப்பதாக விமர்சித்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கும் சரியாகத்தான் இருக்கும் எனக் கூறினார்.

Advertisement
Tags :
ADMKMAINMGR's EPS calculation will be correct on Jayalalithaa's path: S.P. Velumanitoday TN ASSEMBLY
Advertisement