எம். பி - எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
06:30 PM Nov 14, 2024 IST | Murugesan M
எம். பி - எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, எம்.பி - எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை கண்காணிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
Advertisement
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகள் குறித்த விபரங்களை பெற்று, அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், எம். பி - எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டும் என்றும் சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவிடபட்டது.
Advertisement
Advertisement