எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான சிறப்பு கலந்தாய்வு தொடக்கம்!
மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள 135 இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
Advertisement
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 4 சுற்றுகளாக ஆன்லைன் மூலம் நடந்து முடிந்தது.
இதில் 6 எம்.பி.பி.எஸ் மற்றும் 28 பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக மருத்துவ கல்வி இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ் மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், எம்.பி.பி.எஸ் காலியிடங்கள் 7 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே அன்னை மருத்துவ கல்லூரியில் 50 இடங்களும், எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 50 இடங்களும் கூடுதலாக ஒதுக்கீடு செய்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான காலியிடங்கள் 135 ஆக அதிகரித்த நிலையில், அவற்றை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு இன்று நடைபெற்று வருகிறது.