எல்லையில் அமைதி - இந்தியா சீனா உடன்பாடு!
சீனா - இந்தியா எல்லையில் பிரச்னையைக் கைவிட்டு அமைதியை நிலைநாட்ட இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்திய - சீனா இடையே உள்ள 3,488 கிலோ மீட்டல் எல்லைப்பகுதியில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் பராமரிப்பது குறித்து விரிவாக விவாதிக்க, கடந்த 2003ஆம் ஆண்டு சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.
இதுவரை 22 முறை சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், 2019ஆம் ஆண்டு பிறகு, சிறப்பு பிரதிநிதிகளின் 23வது சுற்று பேச்சுவார்த்தை, சீனாவின் பீஜிங்கில் நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியை சந்தித்தனர்.
அப்போது, எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பது, கிழக்கு லடாக்கில், 2020ல் நடந்த மோதலுக்கு பின் உறவில் ஏற்பட்ட விரிசலை சரி செய்வது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து எல்லையில் பிரச்னையைக் கைவிட்டு அமைதியை நிலைநாட்ட இருநாடுகளும் ஒப்புக்கொண்டன.