எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது!
11:05 AM Feb 23, 2025 IST
|
Ramamoorthy S
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
Advertisement
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர்.
மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 5 மீன்பிடி விசைபடகில் இருந்த 32 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், தமிழக மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
Advertisement
இதையடுத்து, 32 தமிழக மீனவர்களையும், தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement