செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

எளிதில் நிறைவேற்றும் நிபந்தனைகளை விதித்திடுக : விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

05:50 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஜாமீன் வழங்கும்போது எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்குமாறு விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 800-க்கும் மேற்பட்டோர் ஜாமீன் கிடைத்தும், பிணைத்தொகை செலுத்த முடியாமல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ்களில் செய்தி வெளியானது.

இந்த செய்தியை அடிப்படையாகக்கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது,அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாமீன் வழங்கப்பட்டும் நிபந்தனைகளை நிறைவேற்றாததால் தமிழகம் முழுவதும் 104 பேர் சிறையிலேயே இருப்பதாகக் அறிக்கை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் ஏற்கனவே நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 32 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதேபோல, புதுச்சேரியிலும் 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அம்மாநில அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் தற்போது சிறையில் உள்ளவர்களை, நிபந்தனைகளை தளர்த்தி விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்குவதால் எந்த பயனும் இல்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்குமாறு விசாரணை நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தினர்.

Advertisement
Tags :
madras high courtMadras High Court instructions to trial courts!MAIN
Advertisement