ஏக்நாத் ரனாடேவின் 110-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!
சமூக மற்றும் ஆன்மீக சீர்திருத்தவாதி ஏக்நாத் ரனாடேவின் 110-வது பிறந்தநாள் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பினரால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Advertisement
ஏக்நாத் ராமகிருஷ்ண ரனாடே மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அமராவதி மாவட்டத்தில் 1914-ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி பிறந்தார். சமூக மற்றும் ஆன்மீக சீர்திருத்தவாதியான இவர், தனது பள்ளி பருவத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு சமூக பணியாற்றி வந்தார். பல பொறுப்புகளை வகித்த இவர் 1962-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில இந்திய பௌதிக் பிரமூக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுவாமி விவேகானந்தரின் போதனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஏக்நாத் ராமகிருஷ்ண ரனாடே, 1963-72 காலகட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விவேகானந்தர் பாறை நினைவகம் மற்றும் விவேகானந்தர் கேந்திரா ஆகியவற்றை கட்டுவதில் பெரும் பங்காற்றினார்.
1982ம் ஆண்டு ஆகஸ்டு 22ம் தேதி ஏக்நாத ரனாடே உடல்நலக் குறைவால் காலமானார். இந்நிலையில், இவரது 110வது பிறந்தநாள் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பினரால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.