செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஏஞ்சல் திரைப்பட விவகாரம் : உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

02:36 PM Feb 17, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுக்காததால் நஷ்டஈடு கோரி பட தயாரிப்பாளர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

ஏஞ்சல் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நிலையில் படப்பிடிப்பை முழுமையாக முடித்து கொடுக்காததால் 25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ராமசரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார்.

Advertisement

இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Advertisement
Tags :
Angel movie case: Madras High Court orders Udhayanidhi Stalin to answer!DMK MinisterMAINudhyanithi
Advertisement