செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஏபிவிபி மாணவர் அமைப்பினர் கைது - அண்ணாமலை கண்டனம்!

09:36 AM Dec 28, 2024 IST | Murugesan M

ஏபிவிபி மாணவர்களை அலுவலகத்திற்குள் நுழைந்து கைது செய்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும், திமுக அரசின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்திய ABVP
மாணவர் அமைப்பின் நிர்வாகிகளை, ஏபிவிபி மாநில அலுவலகத்திற்குள் அத்துமீறி, அதிகாலை 4 மணி அளவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திமுக அரசின் இந்த அடக்குமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவர் என்பதால், அவரைக் காப்பாற்றும் நோக்கில், பாதிக்கப்பட்ட மாணவிக்காகப் போராடிய மாணவர்களைக் கைது செய்திருப்பது, திமுக அரசின் எதேச்சதிகாரப் போக்கு.

Advertisement

பாதிக்கப்பட்ட மாணவிக்காகப் போராடிய, ஏபிவிபி மாணவர்கள் மீதான நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
Anna UniversityAnna University campusapvp students arrestchennai policeDMKFEATUREDMAINstudent sexual assaulttamilnadu government
Advertisement
Next Article