சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மார்ச் 17 ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என தெரிவித்தார்.
மார்ச் 21 ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும் என்றும், பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெறும் என்றும் அப்பாவு கூறினார்.