மதுராந்தகம் அருகே ஏரியில் பதுங்கிய கொள்ளையர்கள் - ட்ரோன் உதவியுடன் பிடித்த பொதுமக்கள்!
மதுராந்தகம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Advertisement
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த சலவை தொழிலாளியான பார்த்தசாரதி என்பவர் பணி முடிந்து திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் முன்பு ஒரு இளைஞரும், வீட்டின் உள்ளே 2 இளைஞர்களும் இருந்துள்ள நிலையில், பார்த்தசாரதி வருவதை கண்ட வெளியே இருந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார்.
வீட்டின் உள்ளே இருந்த இருவர் பின்பக்க வழியாக சென்று அருகில் இருந்த ஏரியில் பதுங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஏரியில் ட்ரோன் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் பல்லாவரத்தைச் சேர்ந்த சஞ்சய், ஜான்சன் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், தப்பியோடிய மற்றொரு இளைஞரை தேடி வருகின்றனர்.