ஏற்காடு : சாலையோரம் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்!
12:07 PM Mar 28, 2025 IST
|
Murugesan M
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சாலையோரம் உள்ள மரங்களில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலர்களைச் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
Advertisement
கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், ஏற்காட்டுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக மலை சாலைகளின் இரு புறங்களிலும் மரங்களில் ஜெகரண்டா மலர்கள் அழகாகப் பூத்துக் குலுங்குகின்றன. இதனை அவ்வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதுடன் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
Advertisement
Advertisement