ஏற்காடு மலைப்பாதையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!
01:55 PM Apr 03, 2025 IST
|
Ramamoorthy S
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத மரம்சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Advertisement
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக 8வது கொண்டு ஊசி வளைவில்
இருந்த பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.
சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மரம் விழுந்ததை அறிந்த தீயணைத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மரத்தை அகற்றினர். இதையடுத்து மலைப்பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை அதிகாரிகள் சீர் செய்தனர்
Advertisement
Advertisement