ஏழைகளின் நலனுக்காக பாடுபடும் பிரதமர் மோடி - உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம்!
09:40 AM Jan 17, 2025 IST | Sivasubramanian P
ஏழைகளின் மீதான இரக்கத்திற்கு பிரதமர் மோடி சிறு வயதில் அனுபவித்த வறுமையே காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் பிரதமர் மோடியின் சொந்த ஊரான மெக்சானா மாவட்டத்தில் உள்ள வத்நகரில், முடிவுற்ற 3 திட்டப்பணிகளை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
Advertisement
நிகழ்ச்சியில் பேசிய அவர், உளவியலின்படி வறுமையில் குழந்தை பருவத்தை கழித்த நபர்கள், அழிவுகரமான சிந்தனையை வளர்த்துக்கொண்டு பழிவாங்கும் உணர்வோடு வளர்கிறார்கள் என குறிப்பிட்டார்.
ஆனால், ஏழை தேநீர் விற்பனையாளரின் குடும்பத்தில் பிறந்த மோடி, தனது வறுமையை ஏழை மக்கள் மீதான இரக்கமாக மாற்றினார் என புகழாரம் சூட்டினார். வேறு எந்த குழந்தையும் தான் எதிர்கொண்ட வறுமையை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக ஏழைகளின் நலனுக்காக பிரதமர் பாடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement