ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளை முயற்சி - மர்ம நபரை தேடும் போலீஸ்!
ராமநாதபுரத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Advertisement
மதுரை - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அச்சுந்தன்வயல் பகுதியில் தனியார் பொறியியல் கல்லுாரி வளாகம் அருகே அரசு வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.
அங்குள்ள இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்த கொள்ளையன் சேப்டி லாக்கரை உடைக்க முடியாததால் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
சேதப்படுத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்த நபர் முகத்தில் போர்வையை சுற்றிக்கொண்டு வந்திருந்ததால் அடையாளம் காண முடியாத நிலை உள்ளது.
ஏ.டி.எம்., உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏ.டி.எம்., இயந்திரத்தில் கடைசியாக நவ.30 ம் தேதி பணம் நிரப்பப்பட்டுளளது. ஆகவே ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணமும் பெரிய அளவில் இல்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.