ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பு - சென்னை, மயிலாடுதுறையில் என்ஐஏ சோதனை!
09:25 AM Jan 28, 2025 IST
|
Sivasubramanian P
சென்னை புரசைவாக்கத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Advertisement
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக எழுந்த புகாரில், சென்னையிலும், மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசலில் உள்ள 15 இடங்களிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக கேரளா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புரசைவாக்கத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஒருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
Advertisement
Advertisement