செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஐசிசி முன்னாள் தலைவர் சீனிவாசன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் - லலித் மோடி குற்றச்சாட்டு!

03:24 PM Nov 28, 2024 IST | Murugesan M

ஐசிசி முன்னாள் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசன் மேட்ச் பிக்சிங் செய்ததாக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், இங்கிலாந்து வீரரான Andrew Flintoff சிஎஸ்கே அணிக்கு வேண்டும் என சீனிவாசன் வற்புறுத்தியதாகக் லலித் மோடி கூறியுள்ளார்.

Flintoff -ஐ சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க வேண்டும் என்பதற்காக அனைத்து அணிகளிடமும் அவரை ஏலம் எடுக்கக்கூடாது என கேட்டதாகவும், சென்னையில் நடைபெற்ற போட்டிகளில் கடைசி நேரத்தில் நடுவர்களை மாற்றியதாகவும் சீனிவாசன் மீது லலித் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

இது அனைத்து அணிகளுக்கும் தெரியும் என்றும், சீனிவாசன் பிசிசிஐ செயலாளராக இருந்ததால், இந்த மோசடி குறித்து யாரும் எதுவும் சொல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, சிஎஸ்கே அணி மேட்ச் பிக்சிங் செய்ததாக கூறி 2 ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிஎஸ்கே அணி மீதான லலித் மோடியின் குற்றச்சாட்டுகள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

Advertisement
Tags :
Chennai Super Kings srinivasanFormer IPL chairman Lalit ModiMAINmatch fixing
Advertisement
Next Article