ஐபிஎல் கிரிக்கெட் புள்ளிப்பட்டியல் - முதலிடத்தில் ஐதராபாத்
01:12 PM Mar 27, 2025 IST
|
Ramamoorthy S
ஐபிஎல் போட்டிகளுக்கான புள்ளி பட்டியலில் ஐதராபாத் அணி முதல் இடத்திலும், ராஜஸ்தான் அணி கடைசி இடத்திலும் உள்ளன.
Advertisement
ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகள் நிறைவு பெற்றுள்ள சூழலில், ராஜஸ்தான் அணிக்கு எதிராக 286 ரன்கள் குவித்த ஐதராபாத் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற பெங்களூரு அணி, பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. குஜராத் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி 3வது இடத்தை பிடித்துள்ள நிலையில்,
Advertisement
சேப்பாக்கத்தில் மும்பை அணியை வீழ்த்திய சென்னை அணி 2 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி இந்த பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ள நிலையில்,
2 போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்ற கொல்கத்தா, 6வது இடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து, லக்னோ, மும்பை, குஜராத், ராஜஸ்தான் ஆகிய அணிகள் கடைசி 4 இடங்களில் உள்ளன.
Advertisement