ஐபிஎல் கிரிக்கெட் - லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை வெற்றி!
06:58 AM Apr 15, 2025 IST
|
Ramamoorthy S
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
Advertisement
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 புள்ளி 3 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.
கேப்டன் தோனி 11 பந்துகளில் 26 ரன்களுடனும், சிவம் துபே 43 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி 2ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
Advertisement
Advertisement