செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஐபிஎல் போட்டி : சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதல்!

02:30 PM Apr 08, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சண்டிகரில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Advertisement

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறு கின்றன. இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 22-வது லீக் ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. நடப்பு சீசனில் சென்னை அணி மோசமான தொடக்கம் கண்டுள்ளது.

தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை வென்ற சென்னை அணி, அதன் பிறகு நடந்த 3 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு சென்னை அணி திரும்பும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

மறுபுறம் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி, 3-ல் 2 போட்டிகளில் வெற்றி  பெற்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. உள்ளூரில் தனது முதல் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிய பஞ்சாப் அணி வெற்றிப்பாதைக்குத் திரும்பும் ஆர்வத்தில் உள்ளது.

முன்னதாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

நேற்று முன்தினம் நடக்க இருந்த இந்த ஆட்டத்துக்கு ராமநவமி கொண்டாட்டம் காரணமாகப் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கொல்கத்தா போலீசார் கூறியதால், 2 நாள் தள்ளிவைக்கப்பட்டு இன்று நடைபெறுகிறது.

Advertisement
Tags :
2025 IPL cricket seriesChennai Super Kings - Punjab Kings clash todayIPL 2025.MAINஐபிஎல் போட்டி
Advertisement