ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் - 12 ஆண்டுகளுக்கு பிறகு சபரிமலையில் விற்பனை செய்ய திட்டம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 1980-களில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க முலாம் பூசிய டாலர் விற்பனை செய்யப்பட்டது. இறுதியாக கடந்த 2011-2012 காலகட்டத்தில் இந்த டாலர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கத்திலான ஐயப்பன் டாலரை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவசம் போர்டின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக டாலர் விற்பனை செய்யப்பட உள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஐயப்பன் டாலரை தயாரித்து வழங்க நகைக்கடைகள் இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறிம் அதிகாரிகள், மகர விளக்கு சீசன் முடிவதற்குள் இதனை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.