ஐயாறப்பர் கோவில் மகா கும்பாபிஷேகம்: தருமபுர ஆதீனம் நேரில் ஆய்வு!
01:33 PM Jan 29, 2025 IST
|
Murugesan M
தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, அதற்கான ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
Advertisement
ஐயாறப்பர் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின், வரும் 3ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி, நாளை யாகசாலை பூஜை வெகு விமர்சையாக துவங்குகிறது.
இவ்விழாவில், 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் மற்றும் வேத விற்பன்னர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், விழாவிற்கு 5 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement