செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஐயா நான் நலமாக உள்ளேன் - நேரலையில் தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நித்தியானந்தா!

10:08 AM Apr 03, 2025 IST | Ramamoorthy S

நேரலை தோன்றிய நித்தியானந்தா தான் நலமுடனும் இருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாகவும்,  அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் மாறி மாறி தகவல் வெளியானது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிகாலை 4.30 மணிக்கு சுவாமி நித்தியானந்தா நேரலையில் தோன்றி விளக்கமளித்தார். தான் உயிருடனும் நலமுடனும் இருப்பதாக பேசிய நித்தியானந்தா, இந்து சாஸ்திரங்களுக்கான ஆன்மிக ஏஐ செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.

Advertisement

மற்ற நாடுகளின் பிரச்னைகள் பற்றி கேள்வி கேட்பார்கள் என்பதாலேயே நேரலையை தவிர்ப்பதாக தெரிவித்த அவர் கைலாசா பற்றியும் தன்னை பற்றியும் கேள்வி கேட்டால் எப்போதும் பதில் தர காத்திருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். கடைசியாக வெளியிட்ட வீடியோ பழையது என தகவல் வெளிவந்த நிலையில் நேரலையில் தோன்றி நித்தியானந்தா விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
FEATUREDKailashMAINNithyanandaSwami Nithyananda appeared
Advertisement
Next Article