ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் இரு செயற்கைகோள்களை ஏவிய இஸ்ரோ - விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்!
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் 2 செயற்கைகோள்களுடன் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
Advertisement
பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்டின் விண்வெளி பயணம் புதன்கிழமை தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ப்ரோபா-3 செயற்கைகோள்கள் புவியிலிருந்து 60 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தொலைவில் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. அங்கிருந்தபடியே இரண்டு செயற்கைகோள்களும் 150 மீட்டர் தொலைவில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளியை ஆய்வு செய்கின்றன.
பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், ராக்கெட் அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவித்தார். இஸ்ரோவின் அடுத்தகட்ட திட்டமான பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், ராக்கெட் தயாராக இருப்பதாகவும், பரிசோதனை இறுதிகட்டத்தில் உள்ளதாகவும் கூறினார்.